/* */

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்
X

புழல் சிறையில் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் கண்டெடுக்கப்பட்டது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறையில் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுக்க சிறை காவலர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டனை சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கழிவறையில் ஜன்னலில் பதுக்கி வைத்திருந்த செல்போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து செல்போனை பறிமுதல் செய்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் சிறைவாசிகள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்துவதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தான் சென்னையின் மிக முக்கியமான புழல் சிறையில் அதிகாரிகள் சோதனை நடத்தி செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற சோதனைகள் இனி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் தொடர்ந்து நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 15 April 2024 9:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்