ஊஞ்சலில் சேலையை சுற்றி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழப்பு

உயிரிழந்த சிறுவன்.
திருவள்ளூர் அருகே வீட்டில் இருந்த ஊஞ்சலில் சேலையை தனது கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த 4-ம் வகுப்பு மாணவன் கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பி.வி.ஆர்/ நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன்/ இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் புகழ்மாறன் .(8). உண்டு. புகழ்மாறன் திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தான்.
இந்நிலையில் வீட்டில் இருந்த ஊஞ்சலில் சேலையை தனது கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சிறிது நேரத்தில் சேலை கழுத்தை பலமாக இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றான். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்து சிறுவன் புகழ் மாறனை மீட்டு அருகில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் புகழ்மாறன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
விளையாட்டு வினையானது என கிராமப்புறங்களில் சொல்லப்படுவது உண்டு. அந்த முதுமொழியை நிஜமாக்கும் வகையில் நடந்த இந்த சம்பவத்தில் சேலையை ஏற்றி விளையாடிக்கொண்டிருந்த பிஞ்சுவின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடும் போது அவர்களை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும். கண்காணிக்க தவறும் பட்சத்தில் அவர்களது விளையாட்டே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu