திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் ரயில் மோதி சாவு

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் ரயில் மோதி சாவு
X

ரயில் மோதி உயிரிழந்த சிறுவன்.

திருவள்ளூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் ரயில் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சிறுவன் நண்பருடன் செல்போனில் பேசியபடியே ரயிலை கவனிக்காத தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மும்பையில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் ரயில் சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சிறுவன் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுவன் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த கேசவன் ஆட்டோ ஓட்டுனர என்பவரின் மகன் தருண்(16)இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும் கடம்பத்தூர் இல் நண்பர்களை சந்திக்க சென்றபது இந்த விபத்து நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் பரிதாபமாக இருந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?