திருவள்ளூரில், வரும் 24ஆம் தேதி புத்தக கண்காட்சி துவக்கம்

புத்தக கண்காட்சி துவங்க இருப்பதால், அதற்கான அரங்கம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 முறையாக புத்தககண்காட்சி வருகின்ற 24.ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளதையொட்டி மாணவர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட தோறும் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருவள்ளூரிலும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆவடியிலும் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
மூன்றாவது ஆண்டாக புத்தக கண்காட்சி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வருகின்ற 24-ஆம் தேதி தொடங்கி மார்ச் 4 ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) இனைந்து நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் 100 அரங்குங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
மேலும் இந்த புத்தக கண்காட்சியில் 10 % தள்ளுபடி செய்ய பட உள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற உள்ளதால் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மாணவர்கள் பயனடைந்து கொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu