பெரியபாளையம் அருகே டிராக்டர் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே டிராக்டர் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு
X

பைல் படம்.

Today Accident News In Tamil- பெரியபாளையம் அருகே டிராக்டர் மோதி 5 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Today Accident News In Tamil- திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த டி.ஆர்.குப்பம் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த சிறுமி இலக்கியா (5) மீது தண்டலத்திலிருந்து முக்கரம் பாக்கம் உரம் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி இலக்கியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. இது குறித்து வழக்கு பதிவு செய்து. விபத்து ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுனர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story