சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிய வழக்கில் 6 பேர் கைது

சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிய வழக்கில் 6 பேர் கைது
X

அரிவாள் வெட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19) இவர் நண்பர்களுடன் இரவு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் எதிர் தரப்பினரை தாக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் நண்பர்களுடன் இரவு காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது திரையரங்கு வாசலில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த எதிர்தரப்பினர் ஆகாஷ் மற்றும் அவருடைய நண்பர்களை அரிவாளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இதுதொடர்பாக மணவாள நகர் காவல்துறையினர் தலைமறைவான 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் அதில் ராகுல் (வயது 21), பிரவீன் ராஜ்( 22) பாலசுப்பிரமணி( 21 )யுவராஜ்( 19 )விக்னேஷ்( 20 )ஹரிஷ் குமார் (17 ) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர் தலைமறைவாக உள்ள வெங்கடேசனை ( 25 )காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!