பாடியநல்லூரில் மாணவ மாணவிகள் பங்கேற்ற 5-வது சிலம்பாட்டம் போட்டி
பாடிய நல்லூரில் மாணவ மாணவிகள் பங்கேற்ற சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் 5-வது சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் டேவிட் மேனியல்ராஜ் தற்காப்புக்கலை பயிற்சி மையம் சார்பில் 5-வது சிலம்பாட்டம் போட்டி டாக்டர் டேவிட் மேனியல்ராஜ் தற்காப்புக்கலை பயிற்சி மையத்தின் நிறுவனர் மாஸ்டர் பார்த்தீபன் ஏற்பாட்டில் எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக அதிகாரி பால்செபஸ்டிபன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி மையத்தின் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
இப்போட்டியில் சிலம்பம் பயிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் போட்டியினை துவக்கி வைத்து சிலம்ப மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதணைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டம் கழக செயலாளர் ஹரிதாஸ், எம்.எம்.டைகெர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி மணிகண்டன், திருவள்ளூர் மாவட்ட வாள்சண்டை கழக செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர்.
இதில் சிலம்ப மாஸ்டர்கள் ரதிராஜா, சந்துரு, ராஜகோபால், சில்வஸ்டர், முத்துக்குமரன், அஜய், பிரபு, வெற்றிசெல்வன், கலைச்செல்வன், தமிழ்செல்வன், கலைசெல்வன், பூவரசன், கோகுல், தணிகைவேல், சந்தோஷ், சுதாகர், மோகன்குமார், வேனில், யோகேஸ்வரி,ரஞ்சித், மைதிலி, யோகத்ப்ஷிகா, சோனா, சுவாதி, சண்முகவள்ளி, சிந்துஜா மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் கோபிநாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu