திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 டிஎன்பி எஸ் சி தேர்வு 58,127 பேர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 டிஎன்பி எஸ் சி தேர்வு 58,127 பேர் பங்கேற்பு
X

திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 டிஎன்பி எஸ் சி தேர்வு நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 58,127 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குரூப் 4 தேர்வினை 58 ஆயிரத்து 127 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி கை குழந்தையுடனும் பெண்கள் தேர்வு எழுத வந்தனர். தீவிர சோதனைக்கு பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப் 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 194 தேர்வு மையங்களில் 58 ஆயிரத்து 127 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தத் தேர்வு எழுத வருபவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி திருவள்ளூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர், டைப்பிஸ்ட் போன்ற பதவிகளுக்கு நடைபெறும் இந்த போட்டி தேர்வில் பங்கேற்க பெண்கள் கை குழந்தைகளுடனும் வந்திருந்து தேர்வு எழுதினர். இதேபோல் ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி உள்ள மையங்களிலும் தேர்வுகள் நடைபெற்றது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!