ரயிலில் தவற விட்ட 50,000 பணம்: மீட்டு கொடுத்த ரயில்வே போலீசார்

ரயிலில் தவற விட்ட 50,000 பணம்: மீட்டு கொடுத்த ரயில்வே போலீசார்
X
திருப்பதி செல்வதற்காக குடும்பத்துடன் வந்தவர், ரயிலில் தவற விட்ட பணப்பையை, காவல்துறையினர் மீட்டு கொடுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் இருந்து திருவள்ளூருக்கு மின்சார ரயிலில் சிவலிங்கம் என்பவரது மகன் சங்கர் (49) என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்து வந்துள்ளார். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி திருப்பதி செல்வதற்காக கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்காக இறங்கி காத்திருந்தார். அப்போது மின்சார ரயிலில் பயணம் செய்து வந்த போது, தனது கைப்பையில் வைத்திருந்த பணம் 50, 000 மற்றும் பொருட்களை மறந்து இறங்கி விட்டதாக, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையத்தில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயிலின் அடையாளங்களை தெரிவித்ததும், 5 வது ரயில் நிலையமான நெமிலிச்சேரியில் இருந்த காவலர் ஜனார்த்தனன் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்படி பணம் வைத்திருந்த பை அதே ரயிலில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதனை அடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்த சங்கர் அவர்களிடம் பணம் இருந்த பையை நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டது. திருப்பதி செல்வதற்காக குடும்பத்துடன் வந்தவர், பணப்பையை தவிர விட்டதும், புகார் கொடுத்து மீண்டும் பணத்தை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்