திருவள்ளூரில் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம்: 5 பேர் கைது

திருவள்ளூரில் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம்: 5 பேர் கைது
X

கைது செய்யப்பட 5 பேர். 

திருவள்ளூரில் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டு திருமண மண்டபத்தில் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் கொண்ட போலீசார் திடீரென தனியார் திருமண மண்டபத்திற்குச் சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருமண மண்டபத்தில் அறை ஒன்றில் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணவாள நகர் போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் பகுஜன் சமாஜ் கட்சி கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (30), குற்ற சரித்திர பதிவேடு கொண்ட திருநின்றவூர், பகுதியைச் சேர்ந்த தேவகுமார் (36), மோகன் பிரபு (25) அபினாஷ் (19), மப்பேடு டில்லிபாபு (26) என 5 பேரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த 2 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india