மீன்பிடி துறைமுகம் ரவுடி சூர்யா கொலை வழக்கில் 4 பேர் கைது

மீன்பிடி துறைமுகம் ரவுடி சூர்யா கொலை வழக்கில் 4 பேர் கைது
X
மீன்பிடி துறைமுகம் பகுதி ரவுடி சூர்யா கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை எண்ணூர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த சூர்யா (எ) கேரளா சூர்யா (வயது28) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.மேலும் இவர் காசிமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.

சூர்யா (எ) கேரளா சூர்யா சம்பவத்தன்று இரவு, மீன்பிடி துறைமுகம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 நபர்கள் அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களுடன் சூர்யா (எ) கேரளா சூர்யாவை கத்தி மற்றும் கருங்கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சூர்யா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா (எ) கேரளா சூர்யா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி, இறந்தார்.இதன் காரணமாக மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, சூர்யா (எ) கேரளா சூர்யாவின் மனைவி பிரியங்கா மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் துறை முக போலீசார் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட காசிமேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), இராயபுரம் பகுதியை சேர்ந்த நிசாந்தன் (29) திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (19)மற்றும் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (20) ஆகிய 4 நபர்களை துறை முகம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். துறைமுகம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் நிசாந்தன் என்பவர் முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து, சூர்யாவை கத்தி மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai products for business