மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
X

தந்தையின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் எஸ்பிபி சரண்.

தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

எஸ்.பி.பி.யின் பாடல்கள் பொது சொத்து, அவரது பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம், ரசிக்கலாம் என எஸ்பிபியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் எஸ்.பி.பி. சரண் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்.பி.பி. யின் 3ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் எஸ்.பி.பி .நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பி.யின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் தனது தந்தையின் நினைவிடத்தில் உருக்கமாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பிபி சரண் கூறியதாவது:-

இத்தனை ஆண்டுகளாக பாடல்களால் தனது தந்தையை வாழ வைத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எஸ்.பி.பி.யின் பாடல்கள் அரசுடையாமை ஆக்கப்படுமா என்ற கேள்விக்கு எஸ்பிபியின் பாடல்கள் பொது சொத்து என்றும், அவரது பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம், ரசிக்கலாம் என தெரிவித்துக்கொள்கிறேன். எஸ்பிபிக்கு சிலை அமைக்க வேண்டும், எஸ்பிபிக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று தற்போது அரசுக்கு கோரிக்கை வைக்கும் எண்ணம் இல்லை. ஒரு மகனாக, ரசிகனாக என்னால் முடிந்ததை தற்போது செய்து வருகிறேன். தகுதியான விருதுகள் தானாக கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
future ai robot technology