எல்லையம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு ஜாத்திரை திருவிழா

எல்லையம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு  ஜாத்திரை திருவிழா
X
பட்டறை அருள்மிகு எல்லையம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு 8 நாள் ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றிய உட்பட்ட மேல்நல்லூர், அதிகத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டறை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு எல்லையம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு ஜாத்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

மலர் அலங்காரத்தில் வீதி உலா வருதல், மாலை பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் பொன்னியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதும், பதினெட்டாம் தேதி விநாயகருக்கும் பெருமாளுக்கும் அபிஷேகம் அலங்காரமும், மாலை 7 மணிக்கு பெருமாளுக்கு பஜனையும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், காலை பக்தர்களுக்கு பால் குடம் எடுத்து வந்த எல்லையம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு அம்மன் அலங்காரம் வீதி உலா மற்றும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினமும் அம்மன் குடம் வீதி உலா நிகழ்ச்சியும், சனிக்கிழமை அம்மனுக்கு கூழ்வார்த்தல் புஷ்ப வாரமும் நடைபெற்றது விழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு அடித்தாண்டம் போடுதல் பக்தர்கள் கொக்கி குத்தி ரதம் இழுத்தல் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மனுக்கு குடத்தில் மஞ்சள் நீராட்டுதல் அம்மன் தாய் வீடு படையலுக்கு சென்று வருதல் அலகு குத்தி மரம் ஏறுதல் இரவு 9 மணிக்கு அலங்காரத்துடன் வீதி உலாவும் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது .

இரவு 10 மணிக்கு தெருக்கூத்து நாடகம் திங்கட்கிழமை கங்கை அம்மன் குளக்கரையில் குடம் களைப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

விழாவில் அனைத்து ஏற்பாடுகள் பட்டறை கிராம நாட்டான்மை அமிர்தலிங்கம் தலைமையில் கிராம பெரியவர்கள், பொதுமக்கள் சார்பாக விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் சனிக்கிழமை அம்மன் சாத்துமுறை செய்த பட்டறை அதிமுக வீ. கோடீஸ்வரன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் லயன் பாலா என்கிற பாலியோகி, வெங்கத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுனிதா பாலியோகி, மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், யோகநாதன், எம். நரேஷ் குமார் அதிமுக பாஜக மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிமா மகேந்திரன், முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் நிலக்கிழார் எல்லையப்பரெட்டியார், பிர ஜுவல்லர்ஸ்உரிமையாளர் பிரபாகரன் மற்றும் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களும் கிராமத்தினர் சார்பாக கோவில் சார்பாக வரவேற்று மாலை அணிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்...

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil