30 வயது இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம்

30 வயது இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம்
X
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் 30 வயது இளைஞருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம்.

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூண்டு கிராமத்தை சேர்ந்தவர் கமல்ராஜ் (27) இவரது சகோதரர் சுதன் (30). கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சுதன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளார்.

மீண்டும் நேற்று முன்தினம் காலை 7:30 அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டபோது உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கமல்ராஜ் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 30 வயது இளைஞருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது