மினி லாரி உள்ளிட்ட 3 வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் காயம்
X
By - Saikiran, Reporter |27 Feb 2024 10:15 AM IST
பெரியபாளையம் அருகே தும்பாக்கம் கிராமத்தில் மினி லாரி உள்ளிட்ட 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து சுந்தர்ராஜன்( வயது 62 ) என்பவர் தனது குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு ஒரு வேனில் 20 பேருடன் சென்றார். அப்போது டிரைவர் ஜெகதீசன் ( வயது 31 ) என்பவர் வேனை ஓட்டினார்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற ஒரு மினி லாரி பெரியபாளையம் அருகே தும்பாக்கம் பகுதியில் லாரிக்கு டீசல் போடுவதற்காக திருப்பியுள்ளார் இதில் எதிர்பாராத விதமாக வேனை ஓட்டி வந்த ஜெகதீசன் மினி லாரியில் மோதியுள்ளார்.
அப்போது அந்த லாரி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு வெளியே வந்த மற்றொரு மினி வேன் மீது மோதியது இதில் அரக்கோணத்தில் இருந்து கோயிலுக்கு சென்ற வேனில் பயணம் செய்த சுந்தர்ராஜன், செல்வி ( 53 ) , ரமணி ( 50) மற்றும் வேன் டிரைவர் ஜெகதீசன் (31) ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலிசார் சம்பவயிடத்திற்கு வந்து காயமடைந்த 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu