கும்மிடிப்பூண்டி அருகே சோதனை சாவடியில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்:டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே  சோதனை சாவடியில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்:டிரைவர் கைது
X

கும்மிடிப்பூண்டி அருகே சோதனை சாவடியில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தப் படுவதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான ஏலாவூர் சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தப் படுவதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத் தகவலின் பேரில் போலீசார் காலை முதல் மாலை வரை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 5 மணி அளவில் ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரி மடக்கி சோதனையிட்டனர்.சோதனையில் லாரியின் பின் பக்கம் பகுதியில் சுமார் 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் தொடர்பாக நுண்ணறிவு பிரிவு போலீசார் டிரைவரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில் பட்டுக்கோட்டை சேர்ந்த அண்ணாதுரை (42) எனவும் தெரியவந்தது இந்த லாரி ஆந்திர மாநிலம் ராஜமன்றி இருந்து சென்னைக்கு வருவதாக தெரிகிறது. அதில் கஞ்சா கடத்தி வந்ததும் அந்த கஞ்சாவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக கொண்டு வரப்பட்டன என்று போலீஸ் விசாரணை கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து லாரி டிரைவர் அண்ணாதுரையை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story