புழல் மத்திய சிறையில் இருந்து மேலும் 22 கைதிகள் விடுவிப்பு
புழல் மத்திய சிறை பைல் படம்.
Puzhal Central Jail -மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதேபோல், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. அதன்படி பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக புழல் சிறையில் இருந்து கடந்த 24ஆம் தேதி 15பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று புழல் மத்திய சிறையில் இருந்து 21ஆண் கைதிகள், 1 பெண் கைதி என 22கைதிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் இதுவரையில் 3பெண்கள் உட்பட 37கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிற கைதிகள் வரும் நாட்களில் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu