புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 2000 மில்லியன் கன அடி உபரி நீர் திறப்பு

புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு  2000 மில்லியன் கன அடி உபரி நீர் திறப்பு
X

புழல் ஏரி (கோப்பு படம்)

புழல் ஏரியிலிருந்து 200 மில்லியன் கனாடியில் இருந்து 2000 மில்லியன் கன அடியாக உபரி நீர் திறந்து வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3074 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நேற்று 570 கனஅடி நீர் வரத்து வந்த நிலையில் இன்று 380 கன அடியாக சரிந்து உள்ளது. ஒரே நாளில் புழல் ஏரிக்கு 212 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 21.2 அடி உயரத்தில் தற்போது நீர் இருப்பு 20.31 அடி உயரத்தை தாண்டி உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் 200 கனஅடியில் இருந்து 1000 கன அடியாக இன்று காலை உயர்த்தப்பட்டது. நேற்று ஒரு மதகின் வழியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டு மதகுகளின் வழியே உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் 1000 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே செல்கிறது. உபரி நீர் செல்லும் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். உபரிநீர் கால்வாயில் வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ, குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு