தனியார் தொழிற்சாலை பேருந்து டிப்பர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயம்

தனியார் நிறுவன பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்ட காட்சி.
திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மீது லாரி மோதியதில் 20 பேர் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹூண்டாய் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்திற்கு 25 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்துகொண்டிருந்த மண் ஏற்றிச்செல்லும் டிப்பர்லாரியானது திடீரென முன்புறம் உள்ள டயர் வெடித்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த தனியார் தொழிற்சாலை பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலை பேருந்தில் இருந்த 20 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மற்றும் லாரிக்குள் சிக்கி கொண்டிருந்த ஓட்டுனரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 அவசர ஊர்தி வர வைத்து அதன் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்,
மேலும் இந்தசம்பவத்தினால் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைகள் இடையே சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
எனவே டிப்பர் லாரிகள் அரசு அனுமதித்த அளவிற்கு அதிகமாக மணல், எம்சாண்ட், ஜல்லி, சவுடு மண் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு செல்வதனால் ஓட்டுனர் லாரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாமல் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்களும்சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu