செல்போன் டவரில் பேட்டரிகள் திருடி விற்பனை செய்த 2 பேர் கைது

செல்போன் டவரில் பேட்டரிகள் திருடி விற்பனை செய்த 2 பேர் கைது
X

செல்போன் டவரில் பேட்டரி திருடி விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டி, தினகரன்.

திருவள்ளூர் அருகே செல்போன் டவரின் பேட்டரிகளை திருடி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுமாவிலங்கை பகுதியில் உள்ள தனியார் நிறுவன செல்போன் டவரில் 24 பேட்ரிகள் கடந்த சில நாட்கள் முன்பாக திருடு போனது . அது தொடர்பாக செல்போன் நிறுவன மேலாளர் லோகநாதன் என்பவர் இது குறித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திலிருந்து முக்கிய சாலையில் வழித்தடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகம் படும் வகையில் டாடா ஏசி வாகனம் ஒன்று நள்ளிரவில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கடந்து செல்வதை போலீசார் கண்டறிந்தனர். அந்த வாகன எண் வைத்து வாகன உரிமையாளரை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அன்றைய தினம அந்த வாகனத்தை திருவள்ளூர் நேதாஜி சாலை டோல்கேட் பகுதியைச் சேர்ந்த தினகரன் இயக்கியது போலீசார் கண்டறிந்தனர். பின்னர் போலீசார் ஓட்டுனர் தினகரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செல்போன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் முத்துப்பாண்டி திருடி இரும்பு கடைக்கு தனது வாகனத்தை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து எலக்ட்ரீசியன் முத்துப்பாண்டியும் போலீசார் கைது செய்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!