திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
X

சாலை விபத்தில் இருவர் பலி ( மாதிரி படம்)

திருவள்ளூர் அருகே இருசக்கரம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2.பேர் உயிரிழந்தனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி மார்க்கமாக ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றனர். அப்போது எதிரே ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்த ஆந்திர பதிவென் கொண்ட லாரி வேகமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களோடு ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை 108.ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சீனிவாசன்( வயது 24). ஹரிகுமார்( வயது 24) ஆகிய இரண்டு பேர் சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து இறந்தவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் அம்சா நகர் பகுதியில் சேர்ந்த சீனிவாசன்,ஹரிகுமார், மற்றும் சின்ராசு என்பதும் இவர்கள் கூலி வேலை செய்து வருவதாகவும், இவர்கள் பணியை முடித்துவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த கோர விபத்து நடந்ததாக தெரியவந்தது.

சின்ராசு என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரி மோதியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் கொசவன்பாளையம் பகுதியில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் நடந்து வருவதால் அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Next Story
ai in future agriculture