பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 159 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதி பணிகள்; காணொலியில் துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 159 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதி பணிகள் துவங்கியது.
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோவில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் தொடங்கி 14 வார காலம் விமர்சையாக நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தமிழக மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சனிக்கிழமை பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூடி காணிக்கை செலுத்துவர். பின்னர் பொங்கல் வைத்து ஆடு, கோழி என பலியிட்டு படையல் இட்டு உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து தேங்காய் கையில் எடுத்து கோவில் சுற்றி வலம் வருவர். அடுத்து, 100 மற்றும் 50 இலவச தரிசனம் என மணி கணக்கில் காத்திருந்து அம்மனை வழிபட்டு செல்வார். பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்களும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சுமார் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து ஆலய வளாகத்தில் திருப்பணிகளுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பிஜே. மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்திய வேலு, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் விபி. ரவிக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஊத்துக்கோட்டை அபிராமி குமரவேல், மற்றும் அரசு துறை சார்ந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வாசுதேவன், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, ஆலய செயல் அலுவலர் பிரகாஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu