வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
X
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு வயது (46) இவருக்கு மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் 4.5.2021 அன்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல் வேலு வேலைக்கு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து 12 மணியளவில் அவரது மனைவியும் கடைக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தந்தை வேலுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்