இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா
X

திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா. 

திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி 139 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நான்காம் ஆண்டு விழாவில் எம்பி ஜெயக்குமார் பங்கேற்றார்.

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவில் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறினார்.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூட துவக்க விழாவானது திருவள்ளூர் நகர தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி டாக்டர் கே ஜெயக்குமார் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இதில் எம் பி ஜெயக்குமார் பேசும்போது திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரலாற்று சாதனையாக அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தேன்.

இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மேம்பாலங்கள் சாலைகள் மற்றும் கிடப்பில் போடப்பட்ட பணிகளை தொடங்கி நிறைவு செய்துள்ளேன்.

தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவு உடல் ஆரோக்கியம் முக்கியம் ஆகையால் இது போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தில் இணைந்து தங்களது உடலை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி