எரிவாயு சிலிண்டர் வெடிப்பு - 5 குடிசைகள் எரிந்தது

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு - 5 குடிசைகள் எரிந்தது
X

திருவள்ளூர் அம்சாநகர் பகுதியில் வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது வேலு என்பவரது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிற்கும் தீ பரவி 5 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்தது. வீட்டிலுள்ள பீரோ, டி.வி., துணி, சமையல் பொருட்கள், நகை, பணம் என அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. இதனைக் கண்ட பெண் ஒருவர் மயக்கமடைந்ததால் அவரை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆட்சியர் பொன்னையா உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட்டதின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், அப்பகுதி மக்களுக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!