புல்லரம்பாக்கம்: 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது!

புல்லரம்பாக்கம்: 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது!
X
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் தேர்வாய் கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு குடிப்பழக்கமும் உள்ளது. இந்த நிலையில் வீட்டின் அருகேயுள்ள 6ம் வகுப்பு மாணவி படித்து வரும் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் சுந்தரராஜனிடம் விசாரித்துள்ளனர். அப்போது சுந்தரராஜன் அவர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து 12 வயது சிறுமியின் பெற்றோர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் சுந்தரராஜனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!