திருவள்ளூர் அருகே மர கிடங்கில் தீ விபத்து

திருவள்ளூர் அருகே மர கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரம் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன பேலட்டுகள் வைக்கும் கிடங்கு உள்ளது. இந்நிலையில் அங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் பூந்தமல்லி, திருவள்ளூர், திருவூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

வானுயர கரும்புகை ஏற்பட்டதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனினும், தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடினர். இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்திருக்கக் கூடும் எனவும், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business