சாலை பாதுகாப்பு விழா: பெண்கள் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம்

சாலை பாதுகாப்பு விழா: பெண்கள் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம்
X

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக நான்காம் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனப் பிரச்சார பேரணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகனப் பேரணி, மாவட்ட ஆட்சியர் அரங்கில் இருந்து தொடங்கி திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே முடிவுற்றது.

சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்களும் ஹெல்மெட் அணிவதன் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இந்த பேரணியில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் நீலாவதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜ், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future