திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பொன்னையா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த ஆட்சியர் மாவட்டம் முழுவதுமுள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் ஆண் 17,30,117.

பெண்கள் 17,67,094 இதர வாக்காளர்கள் 772 உள்பட மொத்தம் 34,98,829 பேர் உள்ளனர். கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 தேதி வரை 18 வயது பூர்த்தியடைந்த 1,28,428 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பட்டுள்ளதாகவும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்ய விரும்புபவர்கள், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, 21.01.2021 முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு