பள்ளிகள் திறப்பு: திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிகள் திறப்பு: திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

கடந்த மார்ச் மாதம் கொரானா பரவலை தடுக்கும் நோக்கில் அனைத்து பள்ளி கல்லூரிகள் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன, தற்போது தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் குறைந்துள்ளதால் முதல்கட்டமாக நாளை முதல் 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஒன்றியத்தில் உள்ள சதுரங்கவேட்டை பூண்டி ஆகிய பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறும்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 லட்சம் மாணவர்களில் 10,11,12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் நாளை பள்ளிக்கு வர உள்ளனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு துவைத்து உபயோகப்படுத்தக்கூடிய துணி முக கவசம் தலா மூன்று வீதம் வழங்கப்பட உள்ளது, மேலும் பள்ளிகளில் சனிடைசர் உடல்நிலை அளவீடு செய்ய வெப்பநிலைமானி ஆகியவையும் தயார் நிலையில் உள்ளது என்றார். இன்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business