சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா

சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா
X

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் வண்ண வண்ண கோலமிட்டு, தமிழர் பாரம்பரியமான சிலம்பம் சுற்றுதல் மற்றும் தப்பாட்ட மேளங்கள் முழங்க மண் பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் பொங்கி வர பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.முன்னதாக நடைபெற்ற கோலப் போட்டியில் சிறந்த முறையில் கோலம் போட்டவர்களுக்கு ஆட்சியர் பொன்னையா பரிசுகளை வழங்கினார். 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பண்பாடு கலாச்சாரம், தமிழரின் தொன்மைகள் கடைபிடிக்கும் வகையில் அனைத்து நிகழ்வுகளும் நடைப்பெற்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!