மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
X

மாகரல் கண்டிகை கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

வெங்கல் அருகே மாகரல் கண்டிகை கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

வெங்கல் அருகே மாகரல் கண்டிகை கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்

திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாகரல் கண்டிகை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமை தாங்கினார்.

மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வி.ஜெ.சீனிவாசன், எம்.குமார், பி.ஜி.முனுசாமி, ஜி.பாஸ்கர், டி.பாஸ்கர், லோகநாதன், அன்பு, ஸ்ரீதர், சுப்பிரமணி, நாராயணசாமி, ஆளவந்தான் உமா சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் குமுதா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.சுப்பிரமணி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு 200 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, எண்ணெய் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஜெகன், ராஜி, ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!