காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா

காதர்வேடு கிராமத்தில்  கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா
X
திருவள்ளூர் அருகே பொம்மாத்தம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா சிறப்பாக நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை அருள்மிகு கொம்மாத்தம்மன் ஆலயம் உள்ளது/ இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கோவில் திருவிழா தொடர்ந்து 5நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இதனையடுத்து இந்த ஆண்டு கடந்த 8.ஆம் தேதி அன்று திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

கொம்மாத்தம்மன் அம்மனுக்கு பால்,தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் கிராம பெண்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்தல் 12.ஆம் தேதியன்று கூழ்வார்த்தல் ,13.ஆம் தேதி அன்று திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடுதல் 15-ஆம் தேதியன்று இரவு 9. மணியளவில் உற்சவரை வாகனத்தின் மூலம் வைத்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

16ஆம் தேதியன்று அம்மனுக்கு படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பின்னர் உற்சவரை டிராக்டர் மூலம் மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அம்மனுக்கு பல்வேறு விதமான தின் பண்டங்கள் மற்றும் பழங்களை கொண்டு படையல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே மூர்த்தி, ஏ.வி. ராமமூர்த்தி, சத்திய வேலு, முனி வேல், தனசேகர் வி.பி. ரவிக்குமார், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், துறைத்தலைவர் சரிதா தட்சிணாமூர்த்தி, ஊர் நிர்வாகி தனசேகரன், மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!