பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் வீடியோ

பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் வீடியோ
X

மாணவர்கள் தொடர்பான வீடியோ காட்சி.

பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் பள்ளிக்கு செல்லாமல் பள்ளி சீருடையிலேயே சுற்றி திரியும் மாணவர்களின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பூந்தமல்லியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையில் பள்ளிக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்,பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் சீருடை அணிந்தபடியே பெண்களை கிண்டல் செய்வது, ஆபாச வார்த்தைகளை பேசுவதுமான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காலை 10:30 மணியை தாண்டியும் கூட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மக்கள் முகம் சுழிக்கும் அளவில் பேருந்து நிலையத்தை சுற்றி திரிவது வாடிக்கையாக உள்ளது என இப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே காவல்துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகம் இது சம்பந்தமாக தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே உடனடியாக காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி கல்வி துறை நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொண்டு மாணவர்கள் இவ்வாறு சுற்றி திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது