பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தல்

பைல் படம்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை பெரும் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், காந்திமதி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கன்னியப்பன், மாரிமுத்து, டில்லி குமார், யமுனா ரமேஷ், மகேஸ்வரி சங்கர பிரியா செல்வம், ஜெயஸ்ரீ, பத்மாவதி, கண்ணன், சத்யபிரியா முரளி கிருஷ்ணன், கௌதமன், கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, காவல்துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கவுன்சிலர் மாரிமுத்து பேசியபோது 15ஆவது குழுவின் மூலம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கான பணித்தேர்வு உத்தரவுகளும் சிஎம்டிஏ இன்னும் பணி தேர்வு உத்தரவுகளும் வரவில்லை. இதனால் மக்கள் பணிகளை பாதிக்கப்பட்டு வருகிறது என்றும், நேமம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் தொழிற்சாலை பல ஏக்கரில் ஜேசிபி மற்றும் பொக்களின் இயந்திரங்கள் மூலம் கனிம வள சட்டத்திற்கு புறம்பாக பல ஆடைகள் ஆயத்திற்கு பள்ளங்கள் தோண்டப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் நிலைத்தது நீர் குறைந்து குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக என்று குற்றம் சாட்டினார்.
அதேபோல் சுரேஷ்குமார் பேசுகையில், நெமிலிச்சேரியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் நாகாத்தம்மன் நகர், ஈவேரா தெரு, செல்லியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தாரசாலைகளை மட்டும் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும் மழைக்காலத்தில் மழை நீர் செல்ல வழி கால்வாய்களை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
மற்றொரு ஒன்றிய குழு உறுப்பினர் பிரியா முரளி கிருஷ்ணன் பேசுகையில், வெள்ளவேடு மற்றும் மேல் மன்னம்வேடு ஊராட்சிகளில் சாலைகளை மேம்படுத்த அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
மற்றொரு கவுன்சிலர் கௌதமன் தெரிவிக்கையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் மக்கள் பணிக்காக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தால் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஒன்றே குழு தலைவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu