வானகரம் - அம்பத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

வானகரம் - அம்பத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி  வாலிபர் பலி
X
வானகரம் - அம்பத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் இறந்தார்.

திருவேற்காடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட வானகரம் அம்பத்தூர் சாலையில் ஸ்ரீவாரி திருமண மண்டபம் அருகில் இன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சென்னீர்குப்பம் போக்குவரத்து காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சென்னீர்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இறந்தவரின் பெயர் பிரமோத் (28) தனியார் மருத்துவ கம்பெனியில் பணிபுரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதமோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்