பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொலையில் ஒருவர் கைது

பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொலையில் ஒருவர் கைது
X

 பைல் படம்

பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொலையில் ஒருவரை போலீசார் கைது செயதனர்.

ஆற்காட்டை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (30) எலக்ட்ரிஷன் இவர் 19ம் தேதி பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை வாசலில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் ஆம்பூரை சேர்ந்த வெற்றிவேல் (44) என்பவரை நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் கைது செய்தனர். விசாரணையில் கொத்தனாரான வெற்றிவேலும் ஜெய்சங்கரும் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர்.

மாலையில் வேலை முடிந்து செல்லும் இருவரும் இரவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த 18ஆம் தேதி இரவு வெற்றிவேலுக்கு போதை தலைக்கேறியதும் தன்னிடமிருந்த மொபைல் போன் மற்றும் பணத்தை ஜெய்சங்கர் திருடியதாக எண்ணி தகராறு செய்துள்ளார்.

அப்போது வெற்றிவேலை ஜெய்சங்கர் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேல் தூங்கிக்கொண்டிருந்த ஜெய்சங்கர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!