தமிழகத்தில் முதன் முறையாக கோடுவெளி ஊராட்சி செயலாளராக திருநங்கை பொறுப்பேற்பு

தமிழத்திலேயே முதன்முறையாக கோடுவெளி ஊராட்சியிவ் செயலர் பணிக்கு நியமிக்கப்பட்ட திருநங்கை தாட்சாயிணி
தமிழகத்திலேயே முதன் முறையாக கோடுவெளி ஊராட்சி செயலாளராக திருநங்கை பொறுப்பேற்பு . . .
பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னமேடு பகுதியை சேர்ந்தவர் தாட்சாயிணி ( 30) திருநங்கையான இவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஊராட்சி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்திருந்தார். ஆனால் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை . இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனக்கு ஊராட்சி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என முதல்வர் தனி பிரிவிற்கு மனு கொடுத்திருந்தார்.
இதில் திருநங்கை தாட்சாயிணிக்கு ஊராட்சி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 26 தேதி ஊராட்சி செயலாளருக்கான பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ், தாட்சாயிணிக்கு வழங்கினார். பின்னர் இவர் பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோரின் வாழ்த்துப்பெற்றார்.
இந்நிலையில், திருநங்கை தாட்சாயிணி கோடுவெளி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சித்ரா குமார் வரவேற்றார்.மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் மல்லிகா, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி ,ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர் குழந்தை வேலு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழகத்திலேயே முதன்முறையாக ஊராட்சி செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட திருநங்கை தாட்சாயிணி கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை ஊராட்சி செயலாளர் பதவிக்கு மனு செய்திருந்தேன் ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வரின் தனிப்பிரிவிற்கு என்னுடைய கோரிக்கை மனுவை ஏற்று எனக்கு பணி வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்.பி ஜான் வர்கீஸ் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu