தாம்பரம் வெளி வட்டச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, மதுரவாயல் டோல்கேட் அடுத்து செல்லும் தாம்பரம் வெளி வட்டச் சாலையில், வாகனங்கள் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், இன்று காலை 4 மணியிலிருந்து வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் தாம்பரம் வெளி வட்டச் சாலையில் பயணித்து கொண்டிருந்த போது, திடீரென போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த போக்குவரத்து நெரிசல் எதனால் ஏற்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, தமிழக முதல்வர் இந்த பாதையை கடந்து செல்கிறார். எனவே, வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.

முதல்வர் அப்பகுதியை கடந்து சென்றபின் மீண்டும் பாதை திறந்து விடப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!