திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்பு

திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்பு
X

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு விவசாய நிலம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியூர்- விளாப்பாக்கம் ஆகிய பகுதியில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் பலர் புகார்கள் அனுப்பியிருந்தனர் . இதனையடுத்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் மேற்பார்வையில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விளாப்பாக்கம் ஏரி பகுதிக்கு சென்று சென்று அப்பகுதியில் யாராவது ஆக்கிரமிப்பு செய்து இருக்கின்றார்களா என ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏரியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிடப்பட்டது தெரியவந்தது. ஜே.சி.பி. எந்திரத்தை வர வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை அகற்றி ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை மீட்டு அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!