செம்பரம்பாக்கத்தில்: ரூ. 10 லட்சம் வங்கியில் கடன் பெற்று நிவாரணப் பொருட்கள் வழங்கிய வார்டு உறுப்பினர்

செம்பரம்பாக்கத்தில்: ரூ. 10 லட்சம் வங்கியில் கடன் பெற்று நிவாரணப் பொருட்கள் வழங்கிய வார்டு உறுப்பினர்
X
பூவிருந்தவல்லி அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிட வங்கியில் 10 லட்சம் கடன் பெற்று நிவாரணப் பொருட்கள் வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சி ,சேன்ட்ரோ சிட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி, செம்பரம்பாக்கம் ஊராட்சி 3 வது வார்டு உறுப்பினரான இவர் தற்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முன் வந்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சம் வங்கியில் கடன் பெற்று அதில் ஊனமுற்றோர், நலிவடைந்தோர்,விதவைகள் என 1000 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி,பருப்பு, சக்கரை, கோதுமை, சேமியா,சோப்பு ,மிளகாய் தூள்,மஞ்சள், காய்கறி என ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணம் பொருட்களும், கிருமி நாசினி, முககவசத்தை செம்பரம்பாக்கம் ஊராட்சியில் தனது மனைவி பத்மாவதியுடன் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.

சாதாரண வார்டு உறுப்பினர் வங்கியில் கடன் பெற்று உதவி செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுளஇது குறித்து ராஜா மணி கூறுகையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்ட போது கண் கூட பார்ததாகவும் இதனால் தன்னால் முயன்றதை செய்ய விரும்பி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார். இதற்கு தன் குடும்பத்திலும் தனக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து தன்னால் முடிந்ததை செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!