பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு சீல்!

பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு சீல்!
X

பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, மளிகை, எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுகிறதா என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அங்கு நகைக்கடை ஒன்று ஷட்டரை திறந்து வைத்து ரகசியமாக வியாபாரம் செய்து வருவதாக தகவல் வந்தது.

இதையடுத்து நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் அங்கு சென்றபோது விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு கடையை பூட்டி சீல் வைத்தனர்.

ஊரடங்கு காலத்தில் விதிமுறையை மீறி செயல்படும் கடைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!