/* */

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

வெங்கல் அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது, டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
X

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு ( மாதிரி படம்)

வெங்கல் அருகே விவசாய நிலத்தில் சேடை உழுது செய்து கொண்டிருந்தபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள பாஷிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால் ஆவார். இவரது டிராக்டரில் அரக்கம்பாக்கம் கிராமம், அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த கேசவன்(வயது56) என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்,நேற்று பாஷிகாபுரத்தில் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் சேடை உழுது கொண்டிருந்தார். அப்பொழுது டிராக்டர் திடீரென பழுதடைந்தது.இதனால் அந்த டிராக்டரை கேசவன் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த டிராக்டர் திடீரென கேசவன் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய கேசவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கேசவனின் மகள் ஐஸ்வர்யா வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் காவல் நிலைய போலீசார் விவசாய நிலத்தில் உயிரிழந்து கிடந்த கேசவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் கவிந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 15 Jun 2024 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  2. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  4. கோவை மாநகர்
    பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
  5. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  6. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  7. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  8. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  9. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  10. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா