சிறுவனை தாக்கிய போதை இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை

சிறுவனை தாக்கிய போதை இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை
பூந்தமல்லி அருகே காதலுக்கு தூது போக மறுத்த சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி திருவேற்காட்டில் காதலுக்கு தூது போக மறுத்த சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்த போதை இளைஞனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு கோளடி பகுதியை சேர்ந்தவர் சிறுவன் சஞ்சய் ( வயது 15). சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் தன் வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கே குடிபோதையில் வந்த சேட்டு என்கிற செல்வம் என்ற இளைஞர் சிறுவனை அழைத்து பக்கத்து வீட்டில் உள்ள பெண் ஒருவரை தான் காதலிப்பதாகவும் அந்த பெண்ணிடம் போய் தான் வந்திருக்கிறேன் என அப்பெண்ணை அழைக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு அந்த சிறுவன் மறுக்கவே ஆத்திரமடைந்த செல்வம் அவனை படுபயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் சிறுவனுக்கு மூக்கு, உதடு, மார்பகம் ,வயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சஞ்சயின் தாயார் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் செல்வத்தை திருவேற்காடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். காதலுக்கு தூது போக மறுத்த சிறுவனை போதை இளைஞன் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story