எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் குடும்பத்தினர் கண்ணீர் மலர் அஞ்சலி

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் குடும்பத்தினர் கண்ணீர் மலர் அஞ்சலி
X

எஸ்பிபி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் குடும்பத்தினர் கண்ணீர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

பாடும் நிலா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலக்குறைவால் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உயிர் நீத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் மறைந்த பிண்ணனிப் பாடகர் எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி நினைவிடத்தில் அவ்வப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

எஸ்பிபி மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இன்று இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி குடும்பத்தினர் இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். எஸ்பிபியின் மனைவி சாவித்திரி அவரது மகள் பல்லவி பேரக்குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ரசிகர்களும் ஏராளமானோர் திரண்டு வந்து எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியும், அவரது நினைவிடத்துடன் செல்பி எடுத்து கொண்டு செல்கின்றனர்.

Tags

Next Story
ai in future education