சென்னையில் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
சென்னையிலிருந்து சைக்கிளில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக சட்டம்-ஒழுங்கு காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு காலை உடற்பயிற்சிக்காக சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு பூந்தமல்லி, ஸ்ரீபெருமந்தூர் இருங்காட்டுக்கோட்டை நடைபெற்ற மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.
மீண்டும் இருங்காட்டுக் கோட்டையில் இருந்து திருமழிசை வெள்ளவேடு, அரண்வாயில் வழியாக மணவாளநகர் வந்து திரும்பி மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர்.அப்போது புதுச்சத்திரம் அருகே சாலையோரம் உள்ள கரும்பு ஜூஸ் கடையில் ஜுஸ் வாங்கி அருந்தினார் .
சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது: தமிழ்நாடு காவல்துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிறு கிழமைகளில் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிளிங் செய்து வருவதாகவும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அலுவலகப் பணிகளை கடுமையாக மேற்கொள்ள முடியும். எனவே, நான்கு மணி நேரம் சைக்கிளிங் செய்வது அடுத்த 12 மணி நேரத்திற்கு கடுமையாக உழைப்பதற்கு உபயோகமாக இருக்கும்.
மேலும் சாலையோரங்களில் உள்ள கரும்பு உள்ளிட்ட இயற்கை உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது, உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பிற்காலத்தில் காவல்துறையில் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu