துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து
X

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி.

வெங்கல் அருகே துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த வாணியன்சத்திரம் பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அலமாதி துணைமின் நிலையம் இயங்கி வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இந்த துணை மின் நிலையத்தில் உள்ள 400 கிலோவாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் செங்குன்றம் மாதவரம் அம்பத்தூர் ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் கட்டுபடுத்த பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோடையில் வெயிலின் உக்கிரத்தால் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெங்கல் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணை மின்நிலையத்தில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!