பூந்தமல்லி அருகே திடீர் தீவிபத்து: பல லட்சம் மதிப்பு பொருட்கள் தீயில் சேதம்

பூந்தமல்லி அருகே திடீர் தீவிபத்து: பல லட்சம் மதிப்பு பொருட்கள் தீயில் சேதம்
X

தீப்பற்றி எரியும் பிளாஸ்டிக் குடோன்.

பூந்தமல்லி அருகே தனியார் பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்குகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதமானது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து வைத்து தரம் பிரிக்கும் குடோன்கள் உள்ளது . இங்கு இருந்த பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின் காரணமாக அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மலமல என கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது அப்பகுதியில். கரும்புகை மண்டலமாக மாறியது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்குள்ள குடியிருப்பு வாசிகள் உடனடியாக காவல்துறைக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட தீயானது அடுத்தடுத்த 3 சேமிப்பு கிடங்குகளில் பரவியது.

இதனால் அடுத்தடுத்த மூன்று சேமிப்பு கிடங்குகளில் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயை அணைக்க அந்த பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் சுமார் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself