கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அஞ்சலி

கொரோனா தொற்றால் உயிரிழந்த மதுரவாயில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உருவப்படத்திற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த மதுரவாயல் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் குமார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு, காலஞ்சென்ற சப் இன்ஸ்பெக்டர் குமார் உருவப்படத்திற்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இதேபோல், சப்-இன்ஸ்பெக்டர் குமாரின் உருவப்படத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பலரும், மலர் வளையம் வைத்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக சப் இன்ஸ்பெக்டர் குமாரின் வாழ்க்கை குறிப்பு வாசிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!