வெங்கலில் ஸ்டாலின் பிறந்தநாளில் பிரியாணி, மரக்கன்று வழங்கல்

வெங்கலில் ஸ்டாலின் பிறந்தநாளில் பிரியாணி,  மரக்கன்று வழங்கல்
X

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,  எல்லாபுரம் திமுக சார்பில் ஆயிரம் பேருக்கு பிரியாணி 6.90 மரக்கன்றுகளை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்

வெங்கலில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரியாணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வெங்கல் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் 69. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஒன்றிய செயலாளர் கேடுவேளி தங்கம், முரளி தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர் பாஸ்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரஜினி ஆகியோர் ஏற்பாட்டில் வெங்கல் பஜார் அண்ணா சிலை அருகே ஆயிரம் பேருக்கு பிரியாணி மற்றும் 690 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டி. 1000, பேருக்கு பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குமார், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி.ஜி. முனுசாமி, செம்பேடு மணி, சேர்த்துப் பாக்கம் ஸ்ரீதர், மற்றும் வெங்கல் ஊராட்சி நிர்வாகிகள் ரஜினிகாந்த், சங்கர், வெங்கடேசன், கிரானே சுந்தரம், ஏழுமலை, சங்கர், தளபதி வெங்கட், தினேஷ், இளவழகன், ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture